மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்குகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ சிறார்களுக்கு சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு ஒசியன் ஸ்டார்ஸ் லங்கா நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பின்தங்கிய நிலையில் காணப்படும் கிராமங்களின் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் பல கல்வி அபிவிருத்தி உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .
இதற்கு அமைவாக மாவட்டத்தில் இயங்குகின்ற முன் பள்ளிகளின் சிறார்களின் கற்றல் நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் , மாணவ சிறார்களுக்கு சீருடைகளும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு ஒசியன் ஸ்டார்ஸ் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக மாணவர்களுக்கான சீருடைகளும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் ஒசியன் ஸ்டார்ஸ் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டிலானி பன்டர் , மாவட்ட முன்பள்ளி நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , வெளிக்கள உத்தியோகத்தர்களான எஸ்.பரணீதரன் , திருமதி .கயல்விழி விநோதரன் , நிறுவன உத்தியோகத்தர்கள் , ஆசிரியர்கள் , கலந்துகொண்டனர்.












No comments: