News Just In

2/24/2020 06:27:00 PM

டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கோரினார்- மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோகித


பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோகித ராஜபக்ஷ அண்மையில் டுவிட்டரில் பதிவேற்றியிருந்த கருத்து சர்ச்சையுடன் கேலிக்கு உள்ளாகியுள்ளதையடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஏயார் பஸ் கொள்வனவு விவகாரம் குறித்து ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டிருந்த செய்தி குறித்து ரோகித ராஜபக்ஷ டுவிட்டரில் நபர் ஒருவர், ‘பொது மக்களின் பணத்திலேயே நீங்கள் வாழ்கிறீர்கள் என்று’ குறிப்பிட்டு டுவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதில் வழங்கிய ரோகித, ‘நாம் தனிப்பட்ட தேவைக்கு பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் நீங்கள் உங்களுக்கு சரியான கல்வியை, வேலையை பெறவில்லை. மனைவி ஒருவரை பெற்று குழந்தையை உருவாக்குங்கள்’ என்று மறுபதில் டுவிட் செய்திருந்தார்.

அதேபோன்று பெண் ஒருவரது டுவிட்டுக்கு மறு டுவிட் ஒன்றை பதிவு செய்த ரோகித, ‘உங்களுக்கு சி.ஐ.டி.யை விட அதிகம் தெரியும் போல் தெரிகிறது. எனவே அவர்களுடன் இணைந்து வழக்குகளை விரைவாக முடியுங்கள். இதன்மூலம் உங்களை நிறுவனமாக வைத்திருக்க கூடிய ஆண் நண்பரை கண்டுபிடிக்க முடியும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பதிவுகள் டுவிட்டர் தளத்தில் கேலிக்குரிய முறையில் பலராலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே ரோகித ராஜபக்ஷ, தனது டுவிட்டர் தளத்தில் குறித்த பதிவேற்றங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.



No comments: