News Just In

2/09/2020 03:00:00 PM

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார் விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன்!

சீனாவில் அதிகளவான உயிரிழப்புக்களை தினமும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி விஞ்ஞானியான எஸ்.எஸ்.வாசன் என்பவரே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆய்வகத்தில் கொரோனா வைரஸை உருவாக்கி ஆராய்ச்சியை மேற்கொண்டு அதற்கான மருந்தினை தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும் குறித்த ஆராய்ச்சியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் எதிர்வரும் 16 வாரங்களுக்குள் மனிதர்களுக்கு குறித்த மருந்தை வழங்கி பரிசோதனையை முன்னெடுக்கத் தயாராகவுள்ளதாகவும் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆபிரிக்காவை அச்சுறுத்திய இபோலா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: