இணைய தளத்தின் இரு பெரும் ஜாம்பவான்களான கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவின் கூட்டு முயற்சியில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த அனைத்து மொழி விக்கிப்பீடிய கட்டுரைப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது.
இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 (Tiger 2.0) என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.
இவை அனைத்தும் போட்டியினை மட்டும் நோக்கமாக கொண்டு எழுதாமல் தமிழ் உள்ளடக்கத்தை இணையப்பரப்பில் அதிகரிக்கும் நோக்கோடு எழுதப்பட்டவை என்பதுடன்
இனி நீங்கள் கூகிள் இத்தலைப்புகளில் தேடும் போது காணக்கிடைக்கும் முதல் பதிலே இந்தப் போட்டியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு இந்த முன்னெடுப்பு முக்கியமானதே.
ஒரு காட்டில் எத்தனைப் புலிகள் உள்ளன என்பதைக் கொண்டு அந்தக் காட்டின் இயற்கை வளத்தை கணித்துவிடலாம். அதாவது புலி வாழ்வதற்கான இரை விலங்குகளும், அவை வாழ்வதற்கான புல்வெளிகளும், புல் வளர்வதற்கான நீர் ஆதாரங்களும் என ஒரு தொடர் சங்கிலி அந்தக் காட்டின் சூழலைப் பிரதிபலிக்கிறது.
அதுபோல ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை காட்டும். அதனடிப்படையில் இந்தக் கட்டுரைப் போட்டியின் பெயரே வேங்கைத் (புலி) திட்டம் என்று கொண்டு போட்டி நடந்தது.
62 விக்கிப்பீடியர்கள் தமிழ் சார்பாகப் பங்கெடுத்து 2942 கட்டுரைகளை எழுதி, தமிழ் இந்தாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. போட்டிக்காக இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பது பெருமைதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: