திருகோணமலை கண்டி பிரதான வீதி, தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லொறி இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்
திருகோணமலையை மிகுந்தபுற பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகநாதன் 47 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி தீப்பற்றி எரிந்தற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி லொறியொன்று பயணித்த நிலையில் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாரதி லொறியை வீதியோரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளதாகவும். இதன்போது லொறியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக லொறி தீப்பிடித்து எரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: