முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வங்கிக் கணக்கில் இருந்து 52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் அவரது அமெரிக்க வங்கிக் கணக்குக்கு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிடப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று (10.02.2020) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமான இடமொன்றை சோதனையிட்டதில் பல்வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளின் 227 புகைப்படப் பிரதிகள், 08 காணிகளின் மூலப்பிரதிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச,
இவ்வாறு எத்தனை ஏக்கர் காணி பெறப்பட்டிருக்கும்? எதிர்வரும் விசாரணைகளில் ரிசாத் பதியுதீன் திரட்டிய பெருந்தொகை சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் சி.ஐ.டி விசாரணையில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
இரண்டாவது தடவையாக மேலும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அனுப்ப தயாரானபோது உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ் பணியகம் இது பற்றி அறிந்து கொண்டதால் அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: