News Just In

2/05/2020 04:40:00 PM

மட்டக்களப்பில் முனைப்பு நிறுவனத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவியளிப்பு

-எஸ்.சதீஸ்-
மட்டக்களப்பில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இரண்டிற்கு அவர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்கென வளர்ப்பு ஆடுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் வவுணதீவு பிரதேசத்திலுள்ள பாவற்கொடிச்சேனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், கிராம உத்தியோகத்தர் தட்சணாமூர்த்தி மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறைந்த வருமானம் பெறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெரும் நோய்குள்ளானவர் மற்றும் விஷேட தேவையுடையவர் உடைய இரு குடும்பங்களுக்கு இவ் உதவி வழங்கப்பட்டது.

No comments: