
(லியோன்)
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது
இலங்கையின் 72 சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் இருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை பேரணியாக சென்று காந்தி பூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதன் போது தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபட்டனர்
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி மதனா பாலகிருஷ்ணா ராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு .அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகள் கலந்துகொண்டனர்க்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.








No comments: