அங்கு கருத்து தெரிவித்த தவிசாளர், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் வாகரைப்பிரதேமும் உள்ளது. ஆனாலும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிரதேசமாகவே தொடர்ந்தும் உள்ளது.
இந்நிலையை மாற்றி அங்குள்ள வளங்களான கடல் வளம், மண்வளம், மற்றும் ஏனைய வளங்களை முறையாக பயன்படுத்தி இப்பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும். மேலும் இப்பிரதேசத்தை சுற்றுலாத்துறைக்குரிய இடமாகவும் மாற்றியமைக்க கூடிய இடமாகவும் திகழ்கின்றது. இவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக வருமானம் ஈட்டும் பிரதேசமாக மாற்றலாம் எனவும் தெரிவித்தார்.
வாகரை பிரதேசத்தில் உள்ள சின்னத்தட்டுமுனை பாடசாலை ஊரியங்கட்டு பாடசாலை, கண்டலடி, புளியங்கண்டலடி, வம்மிவட்டுவான், நாகபுரம், மற்றும் பாற்சேனை ஆகிய அறநெறி பாடசாலைகளுக்கும், கதிரவெளி திலகவதியார் இல்ல மாணவர்களுக்குமாக 500இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வாகரை தமிழரசு கட்சியின் பிரதேச கிளையின் பொருளாளர் அலக்ஸ் நிரோசன் அவர்களின் வேண்டுகோளின் படியே இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வாலிபர் முன்ணணியின் தலைவர் கி.சேயோனும் கலந்துகொண்டார். அத்துடன் இரா.சாணக்கியன் எட்டு கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள இளைஞர்களை சந்தித்து அக்கிராமத்தில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்தும் கொண்டார்.

No comments: