புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 150 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுக்கும் என ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசமானது நேற்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
இதற்கிடையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

No comments: