நாட்டில் பனை நார் உற்பத்தி தற்சயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பனை ஐஸ்கிரீமும் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார்கள் என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் இந்த தொழில் துறை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் பிரபல்யப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பனை அபிவிருத்தி சபை தலைவர் சுட்டிக்காட்டினார். இந்த தயாரிப்புக்கு பனை சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை பனை நார்கள் நீண்ட காலமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரண்டு தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த மன்னார் செல்வாரி உற்பத்தி தொழிற்சாலையில் பனை நார் உற்பத்தி நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ தெரிவித்தார்.
எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு தேவையான பனை நார்கள் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். அனைத்து பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளும் சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
2/23/2020 03:35:00 PM
பனை ஐஸ்கிரீம் அறிமுகம்! பனைநார் உற்பத்தியும் ஆரம்பம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: