இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாடசாலை மட்டத்தில் விளையாட்டு துறையினை மேம்படுத்தும் வகையில் பாடசாலைகளுடன் இணைத்து விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் பாடசாலை ஆசியர்களுடன் கலந்துரையாடப்பட்டு பாடசாலை மட்டத்தில் விளையாட்டு சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன
அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை ஒன்றிணைந்ததாக அமைக்கப்பட்ட சங்கத்தின் செயல்பாடு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாடசாலை விளையாட்டுத்துறை சங்கத்தின் தலைவரும் , உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகருமான கே ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்
சமூக அவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் கே.பிரகாஷ், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் கிழக்குமாகாண தலைவர் ஜோஜ் பிரான்சிஸ், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.









No comments: