News Just In

2/04/2020 10:17:00 PM

வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரித்த வைத்தியரை அச்சுறுத்திய சீன காவல்துறையினர்


ஜனவரி மாத ஆரம்பத்தில் கொரோனவைரஸ் குறித்து எச்சரிக்க முற்பட்டவேளை சீனாவின் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் தற்போது வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.

வுகான் மத்திய மருத்துவமனையின் மருத்துவர் லீ வென்லியாங் என்பவரே கொரேனோ வைரஸ் குறித்து எச்சரிக்க முற்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் இறுதியில் குறிப்பிட்ட மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தவேளை அவர் சார்ஸ் போன்றதொரு வைரசினை அவர் அவதானித்துள்ளார்.

வுகானின் கடல் உணவு சந்தையிலிருந்து பாதிக்கப்பட்ட நிலையில் வந்தவர்கள் மத்தியிலேயே வைத்தியர் புதிய வைரசினை அவதானித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வுகான் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கிசிச்சை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டிசம்பர் 30 திகதி லீ வென்லியாங் சமூக ஊடக உரையாடலின் போது இது குறித்து சக மருத்துவர்களிற்கு எச்சரித்துள்ளார்.

புதிய நோய் தொற்றுகாணப்படுகின்றது முகக்கவசத்தை அணியவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் தான் கண்டுபிடித்தது முற்றிலும் புதிய வைரஸ் என்பதை அவர் உணரவில்லை.

இதற்கு நான்கு நாட்களிற்கு பின்னர் அவரை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்த காவல்துறை பாதுகாப்பு பணியகத்தினர் ஆவணமொன்றில் கைச்சாத்திடுமாறு கேட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் அவர் பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், சமூக ஒழுங்கை குழப்பியதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாங்கள் உங்களை எச்சரிக்கின்றோம் நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பாட்டால் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதியின் முன் நிறுத்தப்படுவீர்கள் என காவல்துறையினர் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.

வதந்திகளை பரப்பியதற்காக எச்சரிக்கப்பட்ட எட்டு பேரில் வைத்தியரும் ஒருவர்.

ஜனவரி மாதத்தில் மருத்துவர் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் உள்ளுர் அதிகாரிகள் அவரிடம்; மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஜனவரி பத்தாம் திகதி நான் இருமத்தொடங்கினேன்,அதற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்,அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்ஜனவரி மாதத்தில் மருத்துவர் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் உள்ளுர் அதிகாரிகள் அவரிடம்; மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஜனவரி பத்தாம் திகதி நான் இருமத்தொடங்கினேன்,அதற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்,அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்

No comments: