News Just In

2/21/2020 03:26:00 PM

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து


முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நாயாறு களப்பினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொக்கிளாய் - முல்லைத்தீவு வீதியால் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி காயமடைந்த இராணுவத்தினர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: