News Just In

2/05/2020 11:05:00 AM

கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளின் சொற்பொழிவு

கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தில் இந்தியா வில் இருந்து வருகை தந்த தமிழ் நாடு, விழுப்புரம், ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தஜீ மஹராஜ் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வு நேற்று(04) ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சொற்பொழிவு நிகழ்வில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ், மட்டக்களப்பு-கல்லடி ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தர்ஜீ மஹராஜ் ஆகியோரும் கலந்து கொண்டதுடன். ஆலய நிருவாகத்தினர்,  பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.








No comments: