(யானோபன்)
இலங்கை சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததனை கொண்டாடும் முகமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அரச நிறுவகங்களிலும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனடிப்டையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சனகெளரி தினேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக பிரதேச செயலக வளாகத்திலும் பிரதேச செயலக கிரம சேவகர் பிரிவுகள் தோறும் மர நடுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக பிரிவு பொதுக்கள் கலந்து சிறப்பித்தனர்











No comments: