இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திநாள் ஏற்பாடு செய்யப்பட்ட 72ஆவது சுதந்திர தின நிகழ்வானது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (04.02.2020) இடம்பெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பேன்ட் வாத்திய அணி வகுப்பும் முப்படைகளின் அணி நடைகளும் நடை பெற்று இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இரு மொழிகளிலும் இசைத்து ஆரம்பிக்கப்பட்டு நான்கு மதங்களை பிரதிபலிக்கின்ற மதகுருமாரின் ஆசி வழங்குதலுடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் விமானப் படையின் இணைப்பதிகாரி ஆர்.எம்.என்.எல் ரத்நாயகவும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் . லக்சிறி விஜேசேன மட்டக்களப்ப மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி முகுந்தன், மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன்,
பிரதம கணக்காளர் க. ஜகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணிய மூர்த்தி, கணக்காளர் பிரேம் குமார் ஆகிய உயர் அதிகாரிகளும், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அலுவலக அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் ஒற்றுமையான செழிப்பு மிகுந்த நாட்டினை கட்டியெழுப்புவோம் எனும் கருப் பொருளிலே இச் சுதந்திர தினம் அமையப்பெற்றுள்ளது. சமாதானம் என்பது தனி நாட்டுக்கு மாத்திரம் அல்ல ஒவ்வொரு தனி மனிதனும் சுதந்நிரமாக வாழ்வதுடன் ஏனைய சமூகப் பிரசைகளையும் சுதந்நிரமாக வாழ்வதற்கு வழி சமைத்துக் கொடுக்க வேண்டும்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் ஒற்றுமையான செழிப்பு மிகுந்த நாட்டினை கட்டியெழுப்புவோம் எனும் கருப் பொருளிலே இச் சுதந்திர தினம் அமையப்பெற்றுள்ளது. சமாதானம் என்பது தனி நாட்டுக்கு மாத்திரம் அல்ல ஒவ்வொரு தனி மனிதனும் சுதந்நிரமாக வாழ்வதுடன் ஏனைய சமூகப் பிரசைகளையும் சுதந்நிரமாக வாழ்வதற்கு வழி சமைத்துக் கொடுக்க வேண்டும்.
அதனோடு செழிப்பாக நாடு எனும் தொனிப் பொருள் நாட்டை இயற்கை மரங்களினால் செழிப்படைய செய்து மக்களின் வாழ்க்கையின் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி இந் நாட்டு மக்கள் அனைவரும் சுபீடசமும் சுகவாழ்வுடனும் வாழ்வதற்கு அனைவரும் இவ்விடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவ் விழாவில் மாவட்ட செயலக உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், முப்படை உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றனர்.





































No comments: