News Just In

2/07/2020 01:21:00 PM

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு!-பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது!!

தற்போதைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஹுபேய் மாகாணத்தில் மேலும் 73 பேர் உயிரிழந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸினால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3,143 பேர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: