வாகனம் ஒன்றினை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பிபில பகுதியில் இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில் திருமணமாகி வெறும் ஐந்து நாட்களே ஆன பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பிபில பிரதேச மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 25 வயதுடைய ரிதிமாலியத்த பிரதேசத்தில் வசித்து வந்தவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிபில பகுதியில் முச்சக்கரவண்டியொன்றினை செலுத்துவதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்த மற்றைய நபர் பலத்த காயங்களுடன் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிபில பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் குறித்த பெண், ஐந்து நாட்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிபில காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: