News Just In

2/01/2020 04:26:00 PM

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களின் வைரஸ் பரிசோதனை முடிவு வெளியானது


சீனாவின் வுஹானில் இருந்த நாட்டிற்கு இன்று காலை அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களுக்கு இதுவரையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என தியத்தலாவ இராணுவ முகாம் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவர்களை தங்கவைத்துள்ள இராணுவ சுகாதார பிரிவில் கடுமையான பாதுகாப்புகள் உறுதி செய்யபட்டுள்ளதோடு , அவர்களின் உடல் நிலை குறித்தும் தீவிர கண்கானிப்பில் இருப்பதாக இராணும் தெரிவித்துள்ளது.

கொழும்பு இராணுவ வைத்திய முகாமின் நோய் தடுப்பு பரிசோதனை மற்றும் சுகாதார சேவைகள் துணை இயக்குநனரான வைத்தியர் செமேஜ் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் பின்பே இதனை தெரிவித்துள்ளார்.

No comments: