தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட முதலாவது பட்டப்படிப்பு அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா பாடநெறியை 31.12.2019 ஆம் திகதியில் முழுமைபடுத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை சமர்பிக்கும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் நிரந்தரவதிவிடத்தை கொண்டிருக்க வேண்டும்.
01-01-2020 திகதியில் ஒருவர் பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிகம் எனின் அவர்கள் வேலையில்லாமல் இருப்பதனை கிராம கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளர் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து பட்டம் பெற்ற சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழை விண்ணப்பத்தின் இறுதி தாளில் புகைப்பட நகல் (ஆரம்ப புகைப்படத்தின் அடிப்படையில், நீதிபதிஃ சமாதான நீதவான் ஆகியொரில் ஒருவர் அதனை உண்மையானது என உறுதிபடுத்த வேண்டும்) ஆகியவற்றை 20.02.2020 திகதிக்குள் ஸ்பீட் குரியர் விரைவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை ஜனாதிபதி செயலகத்தின் www.presidentsoffice.lk என்ற இணைய முகவரியிலும் www.presidentsoffice.gov.lk என்ற இணைய முகவரியில் இருந்தும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0112433261 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.
அதேபோல் விண்ணப்பங்களை ´பட்டதாரி ஃ டிப்ளோமாதாரிகளுக்கான வேலைத்திட்டம், 2020 நிறுவன முகாமையாளர், மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி செயலகம், காலி முகத்திடல், கொழும்பு 01 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
கடிதத்தின் உரையின் மேல் இடது மூலையில் ´2020 வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு திட்டம்´ என குறிப்பிடப்பட வேண்டும்.
குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் கிடைக்க பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
தெரிவுச்செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஒரு வருட கால பயிற்சி வழங்கப்படும்.
அவர்கள் கிராமிய அல்லது தோட்டபுற பாடசாலைகள், பிராந்திய நீர்ப்பாசன அலுவலகங்கள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், பிராந்திய வனவிலங்கு அலுவலகங்கள், உள்ளுர் ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் ஃ மருந்தகங்கள், நிலஅளவை திணைக்களங்கள், விவசாய பண்ணைகள், விரிவாக்கல் சேவை நிலையங்கள், கிராமிய சிறு ஏற்றுமதி அலுவலகங்கள், மதிப்பீட்டு திணைக்களங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றில் பயற்சிகள் வழங்கப்படும்.
அந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
மாவட்ட அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும்.
குறிப்பாக முதல் நியமனம் பெறும் மாவட்டத்தில் 5 வருடம் சேவை செய்வது கட்டாயமாகும்.

No comments: