News Just In

2/05/2020 01:47:00 PM

மட்டக்களப்பு-வீதி விபத்துக்களில் 13 பேர் பலி, 60 பேர் காயம்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த 12 மாதங்களில் 13 பேர் வீதி விபத்துக்களில் பலியாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்கு வரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 60 பேர் காயமடைந்துள்ளதுடன் 72 வாகனங்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விபத்துகளுக்காக 42 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விபத்துக்களில் 20 விபத்துக்களுடன் தொடர்பு பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யாமல் சமாதானமாகத் தீர்த்ததுக் கொண்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

அதிக வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உட்பட்ட காரணங்களினாலேயே குறித்த விபத்துகள் நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments: