News Just In

2/08/2020 06:26:00 PM

விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல்-11 பேர் வைத்தியசாலையில்

விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (07) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் குருத்தலாவை பிரதேச பாடசாலையொன்றின் 03 ஆசிரியர்கள், 08 மாணவர்கள் காயமடைந்து பொரலந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் திரும்பிக்கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய சில நபர்கள் அதிலிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: