ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதித் தவிசாளர் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இக் கூட்டத்தில், கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்துகொண்டு பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: