லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரி உட்பட 05 இராணுவத்தினர் அடங்கலாக 21 பேர் கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் அதிகாலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது கிளிநொச்சி- தரும்புரம், இராமநாதபுரத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. அதிநவீன கருவிகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் புதையல் பொருட்களை தோண்டுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள தரும்புரம் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2/09/2020 10:36:00 AM
Home
/
உள்ளூர்
/
கிளிநொச்சி
/
புதையல் தோண்டிய 05 இராணுவத்தினர் உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது!
புதையல் தோண்டிய 05 இராணுவத்தினர் உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: