News Just In

1/14/2020 09:42:00 PM

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு

மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டம் மற்றும் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கல்விக்கோட்டங்களில் தரம் 04, 05இல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு இம்மாதம் 18,19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின்(CTCT) நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் நடைபெறவுள்ள இச் செயலமர்வு ஒழுங்கமைப்புக்களை மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உ.விவேகானந்தன் அவர்கள் மேற்கொள்வதுடன்

வளவாளர்களாக ஆரம்பப் பிரிவுக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி S.அருளேந்திரன், திருமதி E.கனகரெத்தினம் மற்றும் J.J. ஞானரெத்தினம் ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.

இச் செயலமர்வின் மூலம் ஏறத்தாழ 100 ஆசிரியர்கள் நேரடியாக பயனடையவுள்ளனர்.



No comments: