News Just In

1/16/2020 03:30:00 PM

சவூதி அரே­பியாவில் பணிப் பெண் மர்­ம­மான முறையில் மரணம்-பெற்றோர் முறைப்பாடு


சவூதி அரே­பியாவிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவர் அந்­நாட்டில் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­துள்ளதாக சுாமார் 6 நாட்களின் பின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து உரிய விசா­ரணைகளை மேற்கொண்டு இறந்­த­வரின் சட­லத்தை உட­ன­டி­யாக இலங்­கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கம்படி இறந்தவரின் பெற்றோர் இரத்­தி­ன­பு­ரி-­ வே­வல்­வத்தை பொலிஸ் நிலையத்திலும் இலங்கை வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணியகத்திலும் முறைப்­பாடு செய்துள்ளனர்.

இரத்­தி­னபுர் ஹப்­பு­கஸ்­தென்ன கீழ்ப்பிரிவு தோட்­டத்தைச் சேர்ந்த இராயப்பன் இன்வென்ட் ராணி (வயது 33) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். தோட்டத் தொழி­லாளியான இவர் 4 பிள்­ளை­களின் தாயாவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி கொழும்­பி­லுள்ள தனியார் முகவர் நிலை­யத்­தி­னூ­டாக சவூதி அரே­பியா சென்ற இராயப்பன் இன்வென்ட் ராணி, அங்­குள்ள வீடொன்றில் பணி புரி­யும்­போது வீட்டு உரி­மை­யாளர் மற்றும் அவ­ரது மகன் ஆகி­யோரால் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தாக பெற்­றோ­ருக்கு தெரி­வித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் கொழும்­பி­லுள்ள குறித்த தனியார் முகவர் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்­ளனர். இதன் பின்னர் 3 மாதம் தொடர்ந்து சம்­பளம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

எனினும் அதன் பின்னர் தமது மகள் குறித்து எந்த தக­வலும் கிடைக்­காத நிலையில் கடந்த 8ஆம் திகதி தனது மகள் திடீ­ரென உயி­ரி­ழந்ததாக நேற்று முன்­தினம் (14) மாலை தமக்கு தகவல் கிடைக்­கப்­பெற்­றதாகத் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது மகளின் மரணம் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: