தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி. முகம்மட் தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டடத் தொகுதியினை திறந்து வைத்தார்.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் முயற்சியின் பலனாக கடந்த 2016ம் ஆண்டு துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் மஹாபொல பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொழில்நுட்பவியல் பீடத்தின் கட்டட தேவையை கருத்தில் கொண்டு புதிய கட்டடம் பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டடத் தொகுதி 400 ஆசனங்களைக் கொண்ட அதிநவீன மாநாட்டு மண்டபம் மற்றும் மாணவர்களுக்கான விரிவுரை மண்டபங்கள், ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடங்கள், களஞ்சிய அறை, சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், நீதியாளர் பஸீலூர் ரகுமான், நூலகர் எம்.எம். றிபாய்தீன், பீடாதிபதிகளான கலாநிதி ஏ. றமீஸ், கலாநிதி எஸ். குணபாலன், கலாநிதி யூ.எல். செய்னுதீன், கலாநிதி எம்.எம். ஜுனைடீன், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் மற்றும் திணைக்களத் தலைவர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.





No comments: