புத்தபெருமான் முதல் முதலாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நாளைக் குறிக்கும் துருது முழு நோன்மதி தினம் இன்றாகும்.
பரிநிர்வாணம் அடைந்து 9 மாதத்தில் இதுபோன்ற ஒரு நோன்மதி தினத்தில் புத்தபெருமான் மஹியங்கனை மகாவலி கங்கையை அண்டியுள்ள மஹாநாக பவன எனப்படும் சோலைப் பகுதியை வந்தடைந்தார்.
அங்கு புத்தபெருமான் வழங்கிய புனித கேசத்தை வைத்து மஹியங்கனை சைத்தியம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது சைத்தியம் இதுவாகும். புத்தபெருமானின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் எஞ்சிய புனித பொருட்களில் சிலவும் மஹியங்கனை சைத்தியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக வரலாற்று குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
துருது முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள விஹாரைகளில் இன்று பல்வேறு புண்ணியகாரியங்கள் இடம்பெறவுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விஹாரை புனித பூமியில் அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலையின் அடிப்பகுதியில் பெறுமதியான பொருட்களை வைப்புச் செய்யும் நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது. விஹாராதிபதி சங்கைக்குரிய உருலவத்தே தம்மரக்கித தேரரின் அழைப்பின் பேரில் முப்பீடங்களின் மஹாசங்கத்தினர் பங்கேற்கவுள்ளனர். பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளார்.
1/10/2020 09:07:00 AM
புத்தபெருமானின் முதலாவது இலங்கை விஜயத்தைக் குறிக்கும் நோன்மதி தினம் இன்று!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: