News Just In

1/18/2020 01:31:00 PM

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் உள வள மேம்பாட்டு கண்காட்சி

ஆதார வைத்தியசாலை-கல்முனை வடக்கு உளநலப் பிரிவின் உள வள மேம்பாட்டு கண்காட்சியானது நேற்று வெள்ளிக்கிழமை (17.01.2020) ஆரம்பமானது.

குறித்த உள வள மேம்பாட்டு கண்காட்சியானது இம்மாதம் 17,18,19ஆம் திகதிகளில் முற்பகல் 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (17.01.2020) காலை ஆதார வைத்தியசாலை-கல்முனை வடக்கின் வைத்திய அத்தியட்சகர் Dr.S.முரளீஸ்வரன் தலைமையிலும், விசேட உளநல வைத்திய நிபுணர் Dr.A.G.M.Juraij மேற்பார்வையில் நடைபெற்றது.

உளநலம், சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய சிறு மன நோய்கள், பாரிய மன நோய்கள், போதைவஸ்து பாவனையினால் ஏற்படக்கூடிய நோய்கள், சிகிச்சை முறைகள் என பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இக் கண்காட்சி நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கல்முனை வலய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.G.சுகுணன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.A.L.F.ரஹ்மான் கலந்து சிறப்பித்தனர்.

No comments: