அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று கடற்கரையில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் செல்வதைக்கண்டனர்.
பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை பின் தொடர்ந்து சென்று அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் வைத்து உழவு இயந்திரத்தை மறித்தபோது உழவு இயந்திரத்தை செலுத்தியவர் மூன்று வீடுகளின் மதில்களில் மோதி அவற்றை சேதமாக்கி தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் இருந்தவர் வீழ்ந்து காயமடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த அவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், உழவு இயந்திர சாரதியும், இன்னுமொருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1/13/2020 02:30:00 PM
Home
/
அக்கரைப்பற்று
/
உள்ளூர்
/
கைது
/
பொலிஸ்
/
பொலிஸார் துரத்த மதில்களை உடைத்துச் சென்ற உழவு இயந்திரம்-அக்கரைப்பற்றில் சம்பவம்!
பொலிஸார் துரத்த மதில்களை உடைத்துச் சென்ற உழவு இயந்திரம்-அக்கரைப்பற்றில் சம்பவம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: