News Just In

1/15/2020 10:08:00 AM

அம்பாறை மாவட்ட செயலக களஞ்சிய, அலுவலக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டல்

அம்பாறை மாவட்ட செயலகத்தில் 250 மில்லியனில் அமையவுள்ள களஞ்சிய, அலுவலக புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் செவ்வாய்க்கிழமை (14.01.2020) காலை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் இடவசதியினை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 65 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள் மாவட்ட செயலகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படுகின்றன.

மும்மதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இவ் அடிக்கல் நடும் வைபவத்தில் லாகுகல பிரதேச செயலகப் பிரதேச செயலாளர் யூ.பி.ஐ.எஸ்.சந்தருவான், மாவட்ட செயலக பொறியியலாளர் எம்.ஐ.எம்.ராசீக், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பிரதம உள்ளகக் கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா, வடிவமைப்பாளர் துசித்த இலங்கமகே, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இக் கட்டத்தின் மேற்ப்பார்வை நடவடிக்கைகளில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமிந்த மானவடு தலைமையிலான ஆலோசனைக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.

அண்ணளவாக 250 மில்லியனில் அமைக்கப்படவுள்ள இக்கட்டத்தின் முதல் கட்ட வேலைகளுக்காக 65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலக பொறியியலாளர் எம்.ஐ.எம்.ராசீக் தெரிவித்தார்.

No comments: