
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொங்கல் விழா நிகழ்வுகள் இன்று (18.01.2020) பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மாநகர, பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு நடனம், அதிதிகள் உரை, கிராமிய நடனம், பட்டிமன்றம், வசந்தன் கூத்து போன்ற பல கலை நிகழ்வுகள் இடம்பெற்று நிகழ்வினை அலங்கரித்தன.





























No comments: