
அண்மையில் வெளிவந்த க.பொ.த.உயர்தர பரீட்சையில் உயிரியியல் விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்ற மூதூர் பிரதேசத்தை சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகாவின் வீட்டுக்கு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம் மேற்கொண்டார்.
மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த இவரது உயர் கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள ஆளுநர் தமது சொந்த நிதியிலிருந்து மடி கணனியொன்றை வழங்கி வைத்தார்.
முஸாதிகாவின் குடும்ப உறவினர்களும் ஆளுநர் இதன் போது கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

No comments: