News Just In

1/17/2020 06:01:00 PM

பயன்தரும் மரக்கன்றுகளை பகிர்வதன் மூலம் இன நல்லுறவு சகவாழ்வுத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
'பசுமை உலகம்' (Green World) எனும் கருப்பொருளில் மரங்களைப் பகிர்ந்து சகவாழ்வுக்கு உயிரூட்டும் திட்டமொன்று ஆரையம்பதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பயனாளிக் குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் (Active Citizens Training Programme) பிரிட்டிஷ் கவுன்சில், சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம் (Muslim Aid), தொழிற் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority) ஆகியவை இணைந்து சமூக செயற்பாட்டில் இணைந்துள்ள இளைஞர் யுவதிகளைக் கொண்டு இத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் நீண்ட காலப் பயன்களாக சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையில் சகவாழ்வு போன்றவையும் இயற்கையை வளங்குன்றாமல் பேணுதல், நஞ்சற்ற உணவும் சுகவாழ்வு என்பனவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் கவுன்சிலின் சமூக ஆய்வாளரும் வளவியலாளருமான ஜெயராஜ் பிரியங்கா தெரிவித்தார்.

நிகழ்வில் சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.எம். அஷ்மி, பிரிட்டிஷ் கவுன்சிலின் சமூக ஆய்வாளரும் வளவியலாளருமான ஜெயராஜ் பிரியங்கா, செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் இளைஞர் யுவதிகள், பயனாளிகளான தமிழ் முஸ்லிம் குடும்பங்கள், உட்பட சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர்.

No comments: