மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கிரான் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்த பேருந்தும் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இவ்வாறு மோதியுள்ளன. முன்னால் சென்ற கார் ஒன்றை மோட்டார் சைக்கிளில் சென்றவர் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து அங்கு கூடியவர்கள் விபத்துக்கு உள்ளான பேருந்து மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மக்களின் கவனத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இவ்வாறு இன்று காலை யாழ்ப்பாணம்-பண்ணைப் பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக சிலையொன்றை நிர்மாணிக்க முற்பட்டமையினால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது மக்களின் எதிர்ப்பினால் குறித்த விடயம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், வவுனியாவில் பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அறிந்த குறித்த பகுதி தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடியதால் இந்தப் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)






No comments: