News Just In

12/20/2019 02:09:00 PM

மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு


மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர் சபையின் இவ் வருடத்திற்கான இறுதி கலந்துரையாடல் உதவி பிரதேச செயலாளர் திரு. க .அருணன் தலைமையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன் அவர்களின் இணைப்பாக்கத்திலும் நடைபெற்றது.

நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தால் நடைபெற்ற வினாவிடை போட்டியில் வெற்றிபெற்ற கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும் அடுத்த ஆண்டிற்கான சிறப்பு வேலைத்திட்டமாக விதைப்பந்து திட்டத்திற்கான திட்ட முன்மொழிவும் வரையப்பட்டது.











No comments: