News Just In

12/10/2019 07:54:00 AM

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி வெளிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க 09ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 03ஆம் திகதி நீதிவான் உத்தரவு பிறப்பித்ததுடன், 09ஆம் திகதிக்குள் வாக்குமூலம் வழங்குமாறும் அவ்வதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய நேற்றைய தினம் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

No comments: