News Just In

12/10/2019 07:42:00 AM

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பலத்த மழையினால் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி!

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நிலவும் அதிக மழையுடனான வானிலையினால் விவசாய அபிவிருத்தத் திணைக்களத்திற்கு சொந்தமான 38 சிறு குளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 35,000 இற்கும் அதிக ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. மேலும், வவுனியா, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை, புத்தளம், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளன.

நுவரெலியா, கண்டி,மொனராகலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

No comments: