
மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சின்ன உப்போடை குடா வீதியினை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 11ஆம் வட்டாரத்திற்குட்பட்ட சின்ன உப்போடை குடா வீதி மற்றும் குடாவீதி இணைப்பு வீதிகளை கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
1.5 மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 132 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை உறுப்பினர் ஈவெட்டின் சந்திரகுமார் மற்றும் மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.





No comments: