News Just In

12/10/2019 10:30:00 AM

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்


சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான பிரகடனத்துக்கு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின.

இந்த நாளே 1950ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் வகித்தன.

அதன் முதல் பணியாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க ஜனாதிபதி மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது.

No comments: