News Just In

12/10/2019 10:41:00 AM

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் உயிரிழப்பு


வவுனியா – சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் க.பொ.த. சாதாரண தர மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது-16) என்ற மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments: