
மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வுகள் இன்று(21) அருட்தந்தை பிறைனர் செலர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், கொக்கட்டிச்சோலை பங்குத்தந்தை யூலியன், இராசமாணிக்கனார் அமைப்பினுடைய தலைவர் சாணக்கியன், ஆலய போதகர் அருமைராஜா மற்றும் கிராம மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஒளி விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிகள் உரைகள், பரிசளிப்பு, பாலன் பிறப்பு போன்றவை நிகழ்வை அலங்கரித்தன.
























No comments: