News Just In

12/15/2019 08:31:00 AM

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா யஹம்பத் சனிக்கிழமை (14.09.2011) அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்.

புதிய ஆளுனரை மேலதிக மாவட்ட செயலாளர் வி. ஜெகதீசன், வரவேற்றார்.
இதன்போது பிரதேச செயலாளர் நிலந்தா டி சோய்சா, லாகுகலா பிரதேச செயலாளர் சதருவன் அனுருத்தா, மாவட்ட அனர்த்து முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம். ரியாஸ், முன்னாள்  மேயர் இந்திகா நலின் ஆகியோர் இணைந்திருந்தனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அண்மைய வெள்ள நிலைமை குறித்து ஆராய்ந்ததுடன், மாவட்டத்தில் காணப்படும் யானை பிரச்சினைகள் குறித்தும் ; கலந்துரையாடிய பின்னர், உள்கட்டமைப்பு, பாடசாலைகள், குழந்தை பருவ வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, சுதேச விவசாயத்துறை மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஆகியவை தொடர்பிலும் மாவட்டத்தின் அபிவிருத்தித்திட்டங்கள தொடர்பிலும் ஆராய்ந்தார்.





No comments: