
(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு Al noor charity Association நிறுவனத்தினால் 31 லட்சம் பெறுமதியான இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் (Dialysis machines) அன்பளிப்பு.
22/12/2019 அன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை Al noor charity
Association நிறுவனத்தால் 31 லட்சம் பெறுமதியான இரண்டு சிறுநீரக குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் வைத்திய சாலை அத்தியட்சகர் M. S. M.ஜாபிர் அவர்களிடம் Al noor charity நிறுவன தலைவர் அல்ஹாஜ் S. M.அலியார் அவர்களினால் Al noor நிறுவாகிகள் மற்றும் வைத்திய சாலை நிறுவாகிகள் முன்னிலையில் வழங்கி
வைக்கப்பட்டது.
இதன் மூலம் எமது பிராந்தியத்தில் உள்ள அதிகமான சிறுநீரக நோயாளிகள் நன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இதனை வழங்கியமைக்காக எங்கள் வைத்திய சாலை சமுகம் உங்கள் நிறுவனத்திற்கு இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என வைத்தியசாலை அத்தியட்சகர் m.S.M.ஜாபிர் அவர்கள் கூறினார்கள்








No comments: