உழவு இயந்திரத்தில் இன்று இரவு 08.00 மணியளவில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் மயிலம்பவெளியை சேர்ந்த நடேஸ் சஞ்சை எனும் 17 வயது இளைஞர் பலியாகியுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது உழவு இயந்திரத்தின் பெட்டியினுள் இருந்து இரு இளைஞர்கள் வாகனம் ஓடும் போது விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர், அப்போது ஒருவர் கீழே விள நேரும்போது, மற்றவரை உதவிக்கு நாடியதாகவும், பின்னர் இருவரும் பெட்டியினுள் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
அதில் உயிரிழந்த இளைஞர் இயந்திரத்தின் டயரினுள் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, மற்றைய இளைஞர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார், என தெரியவருகிறது
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கரடியனாறு பொலிஸார் மேற்க் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது




No comments: