News Just In

11/08/2019 09:09:00 AM

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தல வளாகத்தின் பீடங்கள் தொற்றுக் காய்ச்சல் பரவியதன் காரணமாக மூடப்பட்டிருந்தன.

இந் நிலையில் நவம்பர் 25ஆம் திகதி மீண்டும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தல வளாக பயன்பாட்டு அறிவியல், மேலாண்மை, தொழில்நுட்பம், சமூகம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றுக்கான பீடங்கள் கல்விச் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை விவசாய பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments: