News Just In

11/06/2019 04:15:00 PM

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வு

(மட்டு நிருபர்)
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு செவ்வாய்கிழமை (05) நடைபெற்றது.

பாடசாலையினுடைய அதிபர் K.அருமைராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் ஏஞ்சலா அருள்பிரகாசம் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக வலயக் கல்விப்பணிப்பாளர் V .மயில்வாகனம், மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி K.புண்ணியமூர்த்தி , சிறப்பு அதிதிகளாக விசேட கல்விக்கான கல்விப்பணிப்பாளர் M.தயானந்தன் மற்றும்,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு விழாவில் தரம் 05 புலமைப்பரிசில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், பாடசாலையில் சிறந்த  ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசில்கள்,சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.























No comments: