திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில், கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.சுதாகரன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் நெரஞ்சன், ஆகியோரும் பங்கு கொண்டனர்.
நவம்பர் 16ஆம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள், சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள், கனிஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்கள், மண்டபச்; செயலாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் இன்றையதினம் வழங்கப்படடன.
இதன்போது, வாக்குப் பெட்டி விறியோகம், கையேற்றல் உள்ளிட்ட கடமைகளும், தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் கிழக்கு மாகாண பிரதி தேர்தல்கள் ஆணையாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவுள்ளன.
இத்தேர்தலில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 2 லட்சத்து 81ஆயிரத்து 114 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதில், 14148 பேர் தபால் மூல வாக்காளர்களாகும்.




No comments: