News Just In

11/12/2019 01:52:00 PM

நிர்ணய விலையில் எரிபொருள் வழங்க அமைச்சரவை முடிவு

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் மாதாந்தம் மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறையை நிறுத்த அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

ஏற்கனவே ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டண  திருத்தத்தின் அடிப்படையில் எரிபொருளினை பெற்றுக் கொள்ள முடியும்.

இதன்படி ஒரு லீட்டர்
92 ரக ஒக்டேன் 137 /=
95 ரக ஒக்டேன் 161 /=
ஒட்டோ டீசல்   104 /=
சூப்பர் டீசல்     132 /=

இந்த முடிவானது கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில்  மாற்றமடையாமல் இருப்பதனால்  எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: